உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 25/11/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 25/11/2026

பக்தி சொற்பொழிவு * சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * யோகாசன பயிற்சி – உடல் தளர்த்துதல் பயிற்சி: மதுரை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. * கிருத்திகா மண்டல யஜுர் வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. * பகவத் கீதை 16ம் அத்தியாயம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் – கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி * ஏ.ஐ., தொடர்பான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி: வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத் துறை, காலை 9:00 மணி. * பேச்சுக் கலை, ஊடக பணி வாய்ப்புகள் குறித்து பயிற்சி பட்டறை நிறைவு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, முன்னிலை: துணை முதல்வர் நிகிலா, ஏற்பாடு: தமிழ்த்துறை, மதியம் 12:00 மணி முதல். விளையாட்டு * பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 42வது பாரதியார் தின மகளிர் பிரிவு கால்பந்து போட்டி: எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஜெயராஜ் நாடார் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, மகளிருக்கான கோகோ, வாலிபால் போட்டிகள்: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, மகளிர் இறகுபந்து போட்டி, ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், காலை 8:00 மணி முதல். கண்காட்சி * 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ