மேலும் செய்திகள்
இயற்கை விவசாய விழிப்புணர்வு கருத்தரங்கு
06-Sep-2025
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அக்.11, 12 ல் 'மாமதுரை இயற்கை மதுரை' எனும் இயற்கை பொருட்களுக்கான கண்காட்சி நடக்கவுள்ளது. மக்களிடையே இயற்கை உணவு, பாரம்பரிய விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இக்கண்காட்சியில் பழங்கள், சிறுதானிய உணவுப் பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், ரசாயனம் இல்லாத மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், பனை ஓலை கூடை மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்கள், இயற்கை விவசாயம் செய்வதற்கான இடுபொருட்கள், பாரம்பரிய நெல், தானிய விதைகள் காய்கறி விதைகள், விவசாய கருவிகள், மரபு விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். இயற்கைகண்காட்சியை அக்.11ல் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்க உள்ளார்.
06-Sep-2025