மேலும் செய்திகள்
தகராறில் தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு
05-Jul-2025
பேரையூர்: திருமங்கலம் தாலுகா தங்களாசேரி ராணுவ வீரர் கிருஷ்ணகுமார் மனைவி பாப்பாஈஸ்வரி. அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, சவுடார்பட்டி இந்திராகாலனி முத்துபாலன் 36, வந்து உங்கள் கணவர் வீட்டுக்கு பெயின்ட் அடிக்க வரச்சொன்னார் என கூறினார். கணவரின் அலைபேசியில் பாப்பாஈஸ்வரி தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் நான் கூறவில்லை என்றார். முத்துபாலனிடம் பெயின்ட் அடிக்க வேண்டாம் நீங்கள் கிளம்புங்கள் பாப்பாஈஸ்வரி கூறினார். முத்து பாலன் குடிக்க தண்ணீர் கேட்டார். பாப்பாஈஸ்வரி வீட்டுக்குள் தண்ணீர் எடுக்கச் சென்ற போது கதவை பூட்டி கத்தியை காட்டி பாப்பாஈஸ்வரி கழுத்தில் இருந்த 3.5 பவுன் செயினை பறித்துக் கொண்டு முத்துபாலன் தப்பி சென்றார். நாகையாபுரம் போலீசார் முத்துபாலனை கைது செய்தனர்.
05-Jul-2025