உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்

கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்

மதுரை: மதுரை நீதிமன்றத்தில், கஞ்சா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மதுரை, மகபூப்பாளையம் பாண்டியராஜன், 23. இவரது சகோதரர் பிரசாந்த், 22. பாண்டியராஜனின் மனைவி சரண்யா, 20. இவர்கள், வில்லாபுரம் அருகே முட்புதரில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, 2024ல் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிந்தனர்.போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மூன்று பேருக்கும் தலா, 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார். மூன்று பேரையும் சிறையில் அடைக்க அழைத்துச் செல்ல முயன்றபோது, பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்திய அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பிரசாந்த், 'கிளாமர் காளியை கொலை செய்தனர். எங்கள் அண்ணனை எதற்காக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். வெளியில் வந்து அனைவரையும் கொலை செய்வோம்' என, மிரட்டல் விடுத்தார். பாண்டியராஜனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரையும் அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பல்லவி
ஏப் 26, 2025 19:37

அந்த காவலர் ஏன் கட்டிப்பிடித்து நடனம் ஆடுகிறார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்?கைவிலங்கு போட்டு கொண்டு போக வேண்டியது தானே ?


கணேஷ்
ஏப் 25, 2025 08:21

கூட நிக்கிற போலீசைப் பாத்தா பாவமா, பரிதாபமா இருக்கு. என்ப செய்யறது? ஜிவாலே பாக்க அப்பிடித்தான் இருக்காரு.


anantharaman
ஏப் 25, 2025 08:21

இவனையெல்லாம் சட்டப்படி தண்டிக்ககை கூடாது. பிடித்ததும் என்கெளண்டர் தீர்த்துக் கட்டி விடவேண்டும்


அப்பாவி
ஏப் 25, 2025 08:19

இவிங்க மாதிரி ஆளுங்களுக்குதான் முதல்ல ஜாமீன் கிடைக்கும். கேடுகெட்ட சட்டங்கள். இதுமாதிரி பேசுறதுக்கே வாயை ஒடைக்க வாணாமா?


விவசாயி
ஏப் 25, 2025 07:01

மிரட்டல் விடுத்தவனை நிரந்தரமா உள்ளேயே வைக்க போறாங்களா? அதெல்லாம் கிடையாது அடுத்த மாதமே ஜாமின் கொடுத்து வெளிய விட்டுருவாங்க, அவனுங்களும் வெளிய வந்து, சொன்னது மாதிரி கொலை பண்ணிட்டு கஞ்சா வித்துட்டு இருப்பானுங்க. சுட்டு கொள்ளுங்கள் சார் இவனுங்களை


m.arunachalam
ஏப் 25, 2025 06:11

பல நிலை கடந்து பி ஹெச் டி லெவலில் உள்ளனர் . இதில் 12 வருட அரசாங்க செலவும் உள்ளது . தெளிதல் நலம் .


D.Ambujavalli
ஏப் 25, 2025 05:52

ஆஹா, திராவிடக் கண்மணிகலின் பரிணாம வளர்ச்சி…… அபாரம்


வாய்மையே வெல்லும்
ஏப் 25, 2025 05:35

கஞ்சா குடிக்கி கொலைமிரட்டல் தொனியில் பேசிய வாய் மேலேயே சீனிவெடிய வெச்சா கொஞ்சம் பயம் வரும் ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை