உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயில்களில் மண்டலாபிஷேகம் கோலாகலம்

திருப்பரங்குன்றம் கோயில்களில் மண்டலாபிஷேகம் கோலாகலம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது.இக் கோயில்களில் ஏப். 16ல் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை கோயில்களில் மூலவர்கள் முன்பு கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு புனித நீர் மூலம் மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. சுவாமிகளுக்கு காப்புகள் கழற்றப்பட்டன. சிவாச்சாரியார்கள் ரமேஷ், சிவா, ஸ்ரீகாந்த் பூஜை செய்தனர்.வழக்கமாக கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டலாபிஷேகம் நடப்பது வழக்கம். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மே 7ல் புறப்பாடாகின்றனர்.திருவிழாக்காலங்களில் கால் மண்டலம், அரை மண்டல நாட்களில் மண்டலாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களில் கும்பாபிஷேகம் முடிந்து நேற்றுடன் கால் மண்டலம் நிறைவடைந்ததால் மண்டலாபிஷேகம் நடந்தது என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணைக் கமிஷனர் சூரிய நாராயணன் கலந்து கொண்டனர். அறங்காவலர் சண்முகசுந்தரம் பிரசாதம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை