உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்டலாபிஷேகம் 

மண்டலாபிஷேகம் 

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சுப்பிரமணியர் போருக்குச் செல்லும் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ரூ. 8 லட்சம் நிதியுதவியுடன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 19 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 7 ல், கும்பாபிஷேகம் நடந்தது. நாற்பத்தெட்டு நாட்கள் மண்டல பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை மண்டலாபிஷேகம் நடந்தது. யாகசாலை வழிபாட்டுக்குப்பின் புனிதநீரால் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை