உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எல்லோரும் பாராட்டும் வகையில் மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைச்சர் மூர்த்தி பேட்டி

எல்லோரும் பாராட்டும் வகையில் மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைச்சர் மூர்த்தி பேட்டி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.பி., தலைவர் மூக்கையாத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அமைச்சர் கூறியதாவது: உசிலம்பட்டி மக்கள் செல்வாக்கை பெற்று தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ., ஒரு முறை ராமநாதபுரம் எம்.பி.,யாக இருந்த மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, இப்பகுதி மக்கள் கல்வியில் முன்னேற உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லுாரில் கலைக் கல்லுாரி அமைய காரணமாக இருந்தவர் மூக்கையாத்தேவர். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவுவதற்கும் தலைவர்களோடு ஒன்றிணைந்து பாடுபட்டார்.உசிலம்பட்டி மெயின் ரோடு அருகாமையிலேயே மணிமண்டபம் அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். கள்ளர் கல்விக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தை கேட்க இருக்கிறோம், அரசு இடமும் ஆய்வு செய்யப்படும். எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் மணிமண்டபம் அமைக்கப்படும்.இதற்கும், தேர்தல் வருவதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூக்கையாத்தேவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர். இதில் அரசியல் பேச வேண்டிய அவசியமில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை