உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் மருது பாண்டியர் குருபூஜை

சோழவந்தானில் மருது பாண்டியர் குருபூஜை

சோழவந்தான் : சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் அருகே மருதுபாண்டியர் 223வது குருபூஜை விழா நடந்தது.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் நகரச் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் மருதுபாண்டியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க.,வில் மற்றொரு பிரிவாக பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் சங்கங்கோட்டை கிராமம் சார்பில் வைத்திருந்த படத்திற்கு மாலை அணிவித்தனர்.அ.தி.மு.க., விழாவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர். அ.ம.மு.க., விழாவில் நகரச் செயலாளர் திரவியம் தலைமை வகித்தார். தே.மு.தி.க., விழாவில் மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை