உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாஸ்டர் நீச்சல் போட்டி

மாஸ்டர் நீச்சல் போட்டி

மதுரை : இந்திய நீச்சல் சங்கம் சார்பாக மத்தியபிரதேசம் போபாலில் 20 வது மாஸ்டர் தேசிய நீச்சல் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மதுரை நீச்சல் வீரர் சரபமூர்த்தி 200 மீட்டர், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டிகளில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார். இவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், கண்ணன், அமிர்தராஜ், பயிற்சியாளர் விஜயகுமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ