உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் தீச்சட்டி, பால்குடம்

சோழவந்தானில் தீச்சட்டி, பால்குடம்

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் தீச்சட்டி, பால்குடம் நிகழ்வு நடந்தது.ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் வாகனங்களில் அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று பால்குடம், தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, அலகு குத்துதல், அங்கபிரதட்சணம், குழந்தைகளை கரும்புத் தொட்டியில் போடுதல் நடந்தன. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி கோயிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி