உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மேக்ஸ் மாதவ் அபார்ட்மென்ட்கள் விற்பனை

மதுரையில் மேக்ஸ் மாதவ் அபார்ட்மென்ட்கள் விற்பனை

மதுரை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை திருப்பாலையில் மேக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் 'மேக்ஸ் மாதவ்' அபார்ட்மென்ட் வீடுகள் புக்கிங் நேற்று துவங்கியது. மதுரையில் 70 ஆண்டுகளாக கட்டடத்துறையில் ஈடுபட்டு வரும் மேக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம், 26வது திட்டமாக திருப்பாலையில் 15 ஆயிரத்து 690 சதுர அடி பரப்பளவில் 'மேக்ஸ் மாதவ்' அபார்ட்மென்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஐந்து வீடுகள், 2 படுக்கை அறைகள் கொண்ட 30 வீடுகள் என மொத்தம் 35 வீடுகளுடன் ஐந்து தளங்களில் அபார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது. விசாலமான கார் பார்க்கிங், இன்டர்காம், சி.சி.டிவி.,யுடன் 24 மணி நேர பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, இன்வர்டர் வசதி, மாநகராட்சி குடிநீர், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல்குளம், பல்நோக்கு அரங்கு, குழந்தைகள் விளையாடுவதற்கான பிரத்யேக இடம், கார்டன் உள்ளிட்ட வசதிகளுடன் அமைய உள்ளன. இந்த வீடுகள் ஏழு வகையாக 1,044 சதுரடி முதல் 1,611 சதுரடியில் கட்டப்படுகின்றன. ரூ. 81.69 லட்சம் முதல் ரூ.1.22 கோடி வரை விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப வீடுகளை தேர்வு செய்யலாம். வங்கிக்கடன் வசதி உண்டு. 18 மாதங்களில் வீடுகள் ஒப்படைக்கப்படும். நேற்று நடந்த துவக்க விழாவில் முதல் வீட்டுக்கான தொகையை தேனி பிளைவுட்ஸ் நிறுவனர் ராஜசேகரன் -ஹேமலதா தம்பதி மேக்ஸ் இயக்குநர் ராமகிருஷ்ணா - நாகலட்சுமியிடம் வழங்கினர். இயக்குநர் அஸ்வின் பாலாஜி, விற்பனை மேலாளர் மயூரன், பரத்குமார் ஷிவ்ஜிலால்ஜி பட்டேல், சூரஜ் சண்முகம், இயக்குநர் அமலா கிரேஸ்லின், நிக்கோலின் உடனிருந்தனர். வீடுகள் முன்பதிவுக்கு 98651 69986ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ