மருத்துவ மதிப்பீட்டு முகாம்
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். முகாமில் 115 மாணவர்கள் கலந்து கொண்டனர். இம் மாணவர்களுக்கு செவித்துணை கருவி, சக்கர நாற்காலி, கற்றல் உபகரண பெட்டி, அடையாள அட்டை, பஸ் ரயில் சலுகை கட்டண அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, மேற்பார்வையாளர் ரவி கணேஷ், சிறப்பு பயிற்றுநர்கள் பாண்டி, பார்வதி பாய், இந்திரா, டேவிட் ராஜ், பிசியோதெரபிஸ்ட் கார்த்திகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.