மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
பேரையூர்:பேரையூரில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை சேர்மன் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காப்பீடு அட்டை பெறாதவர்கள் பதிவு செய்து கொண்டனர். ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்கள் ஆன்லைன் மூலம் காப்பீடு அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.