உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி - 20 கிரிக்கெட் போட்டி மீனாட்சி கல்லுாரி வெற்றி

டி - 20 கிரிக்கெட் போட்டி மீனாட்சி கல்லுாரி வெற்றி

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை மண்டல அளவிலான மகளிர் டி - 20 கிரிக்கெட் போட்டி கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் நடந்தது.முதல் சுற்றில் மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி யாதவா கல்லுாரியை வீழ்த்தியது. காலிறுதி சுற்றில் யாதவா கல்லுாரியை வீழ்த்திய மீனாட்சி கல்லுாரி அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதி போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியை வென்றது.இறுதிச்சுற்றில் லேடிடோக் கல்லுாரியை வென்ற மீனாட்சி கல்லுாரி முதன்முறையாக கேடயத்தை கைப்பற்றியது. முதல்வர் வானதி, உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், பயிற்சியாளர்கள் ஈஸ்வரன், சரவணன், சிவசிதம்பரம், சூரஜ் மோகன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை