உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.எல்.சி.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்.எல்.சி.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை, : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) பி.காம்., ஹான ர் ஸ் ஏ.சி.சி.ஏ., துறையுடன் கோரிப்பாளையம் ஜி-டெக் கம்ப்யூட்டர் எஜூகேஷன்ஸ் உடன் 'சாப்' (சிஸ்டம், அப்பளிகேஷன்ஸ் அண்ட் புராடக்ட்ஸ் இன் டேட்டா பிராசஸ்) கோர்ஸ்சுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, ஜி டெக்ஸ் மைய நிர்வாகி ரம்யா, இயக்குநர் பாலன் பரிமாறிக்கொண்டனர். துறைத் தலைவர் செல்வராஜ் பங்கேற்றார். இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு நிதி அறிக்கை பகுப்பாய்வு, மேலாண்மை அறிக்கையிடல் போன்ற மேம்பட்ட திறனறிவை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும் நிதி ஆய்வாளர், நிதி கட்டுப்பாட்டாளர், செலவு கணக்காளர், நிதி அமைப்புகளின் நிர்வாகி உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான தகுதியுடன் சான்றிதழ்கள் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ