வெப்பமயமாதலை தடுக்கும் நுண்ணுயிரிகள் பல்கலை கருத்தரங்கில் தகவல்
மதுரை : ''நுண்ணுயிரிகள் மூலம் வெப்பமயமாதலை தடுக்கலாம்'' என இந்திய நுண்ணுயிரியலாளர்கள் சங்க தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சண்முகையா தெரிவித்தார்.மதுரை காமராஜ் பல்கலையில் பயோ டெக்னாலஜி புலம், மைக்ரோபயாலஜிஸ்ட் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் சர்வதேச நுண்ணுயிரிகள் தினக் கருத்தரங்கு நடந்தது. புலத் தலைவர் கணேஷ், மரபியல் பொறியியல் துறைத் தலைவர் சங்கர் வரவேற்றனர்.இந்திய நுண்ணுயிரியலாளர்கள் சங்க தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சண்முகையா தலைமை வகித்து பேசியதாவது:நுண்ணுயிர்கள் மூலம் விவசாயம், மருத்துவம், தொழிற்சாலை, சுற்றுச்சூழ்நிலைகளை பாதுகாப்பதுடன் வெப்பநிலை மாற்றத்தையும் தடுக்கலாம். நம் விவசாயம், உணவுமுறை பழக்க வழக்கங்களுக்கு இனிவரும் காலங்களில் தாவரம் மற்றும் நுண்ணுயிரிகளிலிருந்து கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பல்வேறு கிருமிகள் மூலம் பரவுக்கூடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதுடன், தேவையான எதிர்ப்பு சக்திகளையும் இயற்கையாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். தாவரங்களில் ஏற்படும் நோய்களையும் தடுக்க பயன்படும். இதன் தொடர்ச்சியாக உலக வெப்பமயமாதலையும் தடுக்கலாம் என்றார்.மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கினர். மூலக்கூறு நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சிவக்குமார் ஏற்பாடு செய்தார்.