உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

மேலுார்: மேலுார் 6வது வார்டு பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் நாளான நேற்று பக்தர்கள், மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு சென்றனர். பக்தர்கள் கொண்டு சென்ற பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஜூன் 4) முளைப்பாரி ஊர்வலம், ஜூன் 5 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ