உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: கருமாத்துாரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10, ஊக்கத்தொகை ரூ.10 உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வெண்மணிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, ஜோதிபாசு, தங்கமாயன், தர்மலிங்கம், செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொள்முதல் விலை பசும்பால் லிட்டருக்கு ரூ.45 ம், எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 65 ஆகவும் தரவேண்டும். ரூ.3 வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.10 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை