உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை குவிந்தது 59 ஆயிரம் மனு அமைச்சர் தகவல்
மதுரை: மதுரை மாநகராட்சியில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் சுற்றுலா தகவல் மையத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார். மேயர் இந்திராணி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். மண்டலம் 3க்கு உட்பட்ட 50, 51வது வார்டுகளை சேர்ந்த மக்கள் மனுக்கள் அளித்தனர். இதுபோல் மண்டலம் 4க்கு உட்பட்ட 43, 44 வது வார்டு மக்கள் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமில் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் பெறுவதை பார்வையிட்ட அமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், மதுரையில் இதுவரை நகரில் 22, மாவட்டப் பகுதியில் 43 என 65 முகாம்களில் மகளிர் உரிமை தொகை கோரி 32 ஆயிரத்து 55 மனுக்கள் உட்பட மொத்தம் 59 ஆயிரத்து 428 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார். பூமிநாதன் எம்.எல்.ஏ., துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், உதவி கமிஷனர் பிரபாகரன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி அலுவலர் வினோத், நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்பாபு, அகமது இப்ராஹிம், கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, முகேஷ் சர்மா, தமிழ்ச்செல்வி பங்கேற்றனர்.