உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆதிதிராவிடர் மயானங்களில் பிரச்னை அமைச்சர் மதிவேந்தன் ஒப்புதல்

ஆதிதிராவிடர் மயானங்களில் பிரச்னை அமைச்சர் மதிவேந்தன் ஒப்புதல்

அலங்காநல்லுார: அலங்காநல்லுார் ஒன்றியம் அ.கோவில்பட்டியில் சமுதாயகூட கட்டுமான பணியை ஆய்வு செய்த துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் மயானங்களில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பிரச்சனை உள்ளது என தெரிவித்தார்.இந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.77.89 லட்சத்தில் கட்டப்படும் கிராம சமுதாய கூட பணிகள் காலதாமதம் செய்வது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என ஒப்பந்ததாரர் மீது புகார் சென்றது. நேற்று வந்த அமைச்சர், ஒப்பந்ததாரர் பெரியகருப்பனிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதிகாரிகள் அக்கறை மற்றும் உத்தரவாதம் தரும் போது வேலை செய்வதில் உங்களுக்கு என்ன சிரமம் என கடிந்து கொண்டார்.அவர் கூறியதாவது: ஆதிதிராவிடர் மயானங்களில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பிரச்சனை உள்ளது. ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். கிராமங்களில் எந்த ஒரு பாகுபாடும் இன்றி ஒரே இடத்தில் அடக்கம் செய்தால் ஆண்டுக்கு 10 கிராமங்களை தேர்வு செய்து கிராம வளர்ச்சிக்கு ரூ.ஒரு கோடி தர முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை