மேலும் செய்திகள்
வணிக வரி அலுவலர் கூட்டம்
07-Oct-2025
மதுரை: நிலுவை வரியினங்களை வரும் பிப்ரவரிக்குள் வணிகவரித்துறை அதிகாரிகள் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார். மதுரை, விருதுநகர் மண்டல வணிகவரி அலுவலர்களின் 2025 -2026ம் நிதியாண்டு அக்டோபர் வரையான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. வணிகவரித்துறை கமிஷனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, வரித்துறை கூடுதல் கமிஷனர்கள் சுபாஷ், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் பேசியதாவது: அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி வணிக வரித்துறை ஈட்டிக்கொடுக்கிறது. ஏற்றுமதியில் நெருக்கடி ஏற்பட்டாலும் அவ்வகையில் ஏற்படும் வருவாய் இழப்தை ஈடுசெய்யும் வகையில் புதிய தொழில்முனைவோர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். வரும் பிப்ரவரிக்குள் நிலுவை வரி இனங்களை அதிகாரிகள் வசூலித்து முடிக்க வேண்டும் என்றார்.
07-Oct-2025