உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழனிசாமியை துாக்கத்தில் இருந்து விழிக்க சொல்லுங்கள்; அமைச்சர் ராஜா காட்டம்

பழனிசாமியை துாக்கத்தில் இருந்து விழிக்க சொல்லுங்கள்; அமைச்சர் ராஜா காட்டம்

மதுரை : ''தமிழகத்தில் 2026 ல் வெற்றி பெறுவோம் எனக்கூறும் பழனிசாமியை முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்கச் சொல்லுங்கள்,'' என, மதுரையில் அமைச்சர் டி.ஆர்.பி.,ராஜா காட்டமாக கூறினார்.அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மண்டலம் வாரியாக தி.மு.க., ஐ.டி., பிரிவு செயல்பாடுகள் குறித்து ஆய்வு துவங்கியுள்ளது. சமீபமாக பிற கட்சிகளின் ஐ.டி., பிரிவு அவதுாறு பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தி.மு.க.,வில் முதல்வர், துணைமுதல்வர் உதயநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றனர். அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கே எங்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதற்கிடையே புதிதாக இளைஞர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டியுள்ளது.2026 ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சி அமையும் என அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கனவு காண்கிறார். அவரை முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்க சொல்லுங்கள்.மதுரையில் பிரமாண்டமான டைடல் பூங்கா அமையவுள்ளது. டெண்டர் பணி முடிந்துள்ளது. விரைவில் பல்வேறு வசதிகளுடன் தனித்த கட்டடமாக அமையும். அதற்கான பணிகள் துவங்கியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி