மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் கூட்டம்
30-Sep-2025
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ஸ்ரீராஜம் ஜி.வி.ஆர்., கல்வி, சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 36 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ. ஒரு லட்சத்து 38 ஆயிரத்து185க்கான காசோலை கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரனிடம் வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்திற்காக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ரூ. 50 ஆயிரம் வழங்கினார். அவர் பேசுகையில், 'மாணவர்கள் நன்கு படித்து உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். நீங்களும் வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்' என்றார். வணிகவியல் துறை தலைவர் துரைசாமி நன்றி கூறினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
30-Sep-2025