மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனை
06-Oct-2025
சோழவந்தான் : சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கிடந்ததையடுத்து தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல், குழாய் பதிக்கும் பணி, குடிநீர் தொட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து பணிகளையும் பார்வையிட்டார். இப்பகுதிக்கு அரசு பஸ் வருவதில்லை என மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து 'பஸ் ஏற்பாடு செய்யப்படும்' என உறுதியளித்தார். துணை பி.டி.ஓ., பூர்ணிமா, ஊராட்சி செயலர்கள் முனியாண்டி, காசிலிங்கம், கதிரேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெகன் உடனிருந்தனர்.
06-Oct-2025