உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை சிறை கழிவறையில் அலைபேசி பறிமுதல்

 மதுரை சிறை கழிவறையில் அலைபேசி பறிமுதல்

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி பயன்படுத்துவதாக கண்காணிப்பாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுபடி, நேற்றுமுன்தினம் காவலர்கள் சோதனையிட்டனர். 'ரிமாண்ட் செல்' ஒன்றில் கைதி செல்வபாண்டி என்பவர், கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சக தண்டனை கைதிகள் முத்திருள், குமார் ஆகியோர் செல்வபாண்டியிடம் கொடுத்து கழிவறையில் மறைத்து வைக்கச் சொன்னது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு முத்திருள் சென்றபோது அவரிடம் குமார் ரூ.9 ஆயிரம் கொடுத்து அலைபேசி வாங்கிவர செய்துள்ளார். நவ.10ல் நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பிய முத்திருள், ஆசன வாயிலில் மறைத்து அலைபேசியை சிறைக்குள் எடுத்து வந்துள்ளார். கைதிகள் மூவர் மீதும் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாரிடமாவது அலைபேசி மூலம் பேசினார்களா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ