உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.53.30 லட்சம் மதிப்பில் அலைபேசிகள் மீட்பு

ரூ.53.30 லட்சம் மதிப்பில் அலைபேசிகள் மீட்பு

மதுரை: மதுரை நகரில் 6 மாதங்களில் காணாமல் போன 533 அலைபேசிகள் மீட்கப்பட்டு போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.அலைபேசிகள் காணாமல் போனது தொடர்பான புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்டுபிடிக்க தனிப்படை, சைபர் கிரைம் போலீஸ் குழுக்களை நியமித்து கமிஷனர் உத்தரவிட்டார். இத்தனிப்படையினர் தல்லாகுளம் போலீஸ் எல்லையில் 216, அண்ணாநகரில் 105, செல்லுாரில் 32 உட்பட 533 அலைபேசிகளை மீட்டனர். அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. துணை கமிஷனர்கள் ராஜேஸ்வரி , கருண் காராட், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் பங்கேற்றனர்.கமிஷனர் கூறுகையில், நகரில் மேம்பாலங்கள், ரோடு பணிகளால் சில போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுப் பாதைகளில் ரோடுகள் மோசமாக இருந்தால் அதை சீரமைக்க கோரி உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்படும் மக்கள் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறைதீர் முகாம்களிலும் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி