கழிவுநீர் கால்வாயில் வீணான நிதி
சோழவந்தான்: திருவேடகம் அக்ரஹாரத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் பயன்படாமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. நாகராஜன் கூறியதாவது: ஓராண்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய் திட்டமிடலின்றி அமைக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளின் கழிவு நீர் சாக்கடை கால்வாயில் கலப்பதில்லை. பின்புறமாக வேறு பகுதி கால்வாயில் கலக்கிறது. இதனால் கால்வாய் கட்டப்பட்டு காட்சி பொருளாகவே உள்ளது. ஆங்காங்கே செடி, கொடிகள் கால்வாயை அடைத்தபடி வளர்ந்துள்ளன. மேலும் சரியான நீர் வாட்டம் கொடுத்து அமைக்காததால் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதில் செல்லாமல் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தேங்கியிருக்கும் தண்ணீரால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே கால்வாயை சீரமைத்து தண்ணீர் எளிதாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.