உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாடப் புத்தகத்தில் மூக்கையா தேவர் தி.மு.க., எம்.பி., யோசனை

பாடப் புத்தகத்தில் மூக்கையா தேவர் தி.மு.க., எம்.பி., யோசனை

உசிலம்பட்டி: மறைந்த பா.பி., தலைவர் மூக்கையாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க., வினர் தேனி லோக்சபா எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.  தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: துாய்மையான அரசியல்வாதியான மூக்கையாத் தேவர் ஆறு முறை எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். செக்கானுாரணி பஸ்ஸ்டாண்டுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். லோக்சபாவில் இயற்றப்பட்ட 2006 வனச்சட்டப்படி மக்களுக்கு நீதி வழங்கினால், மேகமலை விவகாரம் தொடர்பாக மக்களுக்கு பாதிப்பு வராது. அதை முன்னிறுத்தி தி.மு.க., சார்பில் வழக்கு தொடுக்க உள்ளோம், என்றார்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ