உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகனுக்கு ஜாமின் கொடுக்க வந்த தாய் கோர்ட்டில் மயங்கி விழுந்து பரிதாப சாவு

மகனுக்கு ஜாமின் கொடுக்க வந்த தாய் கோர்ட்டில் மயங்கி விழுந்து பரிதாப சாவு

திருச்சி: திருச்சி மாவட்டம், எட்டரை அருகே கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சண்முகம், அடிதடி வழக்கில் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நேற்று அவரது ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாமினுக்கு சூரிட்டி கையெழுத்திட, அவரது தந்தை தனபால், தாயார் விஜயா, 56, பிச்சையம்மாள் என்பவர் உள்ளிட்ட மூவரும், நேற்று மதியம் நீதிமன்றம் வந்தனர்.நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தபோது, விஜயா திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் செஷன்ஸ் கோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர். மகனுக்கு ஜாமின் கையெழுத்திட வந்த தாய் மயங்கி விழுந்து இறந்த சம்பவம், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !