உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேறும் சகதியும் நிறைந்த மேலக்குயில்குடி ரோடு

சேறும் சகதியும் நிறைந்த மேலக்குயில்குடி ரோடு

மேலக்குயில்குடி : மதுரை நான்குவழிச் சாலையில் இருந்து மேலக்குயில்குடி செல்லும் ரோடு சேறும் சகதியுமாக நிறைந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.திருமங்கலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் 4 வழிச்சாலையில் இருந்து மேலக்குயில்குடிக்கு 2 கி.மீ., தொலைவுக்கு ரோடு உள்ளது. இந்த ரோட்டில் மதுரை மண்டல அண்ணா பல்கலை, மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் என முக்கியமான அலுவலகங்கள் உள்ளன.இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளது. ஏராளமான வாகனங்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பதிவுக்காகவும், தகுதிச்சான்று பெறவும் சென்று வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோடு குண்டும், குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.வாகனங்கள் தட்டுத்தடுமாறிச் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. இந்த ரோட்டை விரைந்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை