நகராட்சி கூட்டம்
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னசாமி, மங்கள கவுரி, ரவி உள்பட பலர் பங்கேற்றனர். 30 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. விரிவாக்கப் பகுதிகளில் புதிய பிளாட்டுகள் அமைக்கப்படும் போது பூங்கா, தண்ணீர் தொட்டி போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டும். ஒதுக்காவிடில் அனுமதி வழங்கக் கூடாது என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.