உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி : காமராஜரை இழிவு படுத்திய தி.மு.க., திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து சமயநல்லுாரில் போலீஸ் ஸ்டேஷன் முன் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் பாண்டியன், முன்னாள் மாநில நிர்வாகி முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல், பொங்கி பெருமாள், சிவக்குமார், மாநில இளைஞரணி கமிட்டி ராஜா முன்னிலை வகித்தனர். நிர்வாகி கணேஷ்பாண்டி வரவேற்றார். திருச்சி சிவா, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் உறவின்முறை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் விஜயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ