தேசிய விவசாயிகள் தினம்
திருப்பரங்குன்றம்: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் சங்கம்சார்பில் நாராயணசாமி போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பாண்டி, சிவராமன், முஜிபுர் ரஹ்மான், மெய்ராஜன், கிழவன்சாமி, சமயன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வாடிப்பட்டி: கீழசின்னனம்பட்டியில் ஒன்றிய உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்து ஊட்டச்சத்து காய்கறி தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள், மானியங்கள் மற்றும் அவற்றை பெறும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பொதுமக்களுக்கு திட்ட அலுவலர் ரஞ்சிதா விதை பாக்கெட்டுகள் வழங்கினார். களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, தேவிப்ரியா, வாஞ்சிநாதன், ஜஹீன் பங்கேற்றனர்.