உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய பசுமைப்படையின் வாழ்வியல் விளக்க கண்காட்சி

தேசிய பசுமைப்படையின் வாழ்வியல் விளக்க கண்காட்சி

மதுரை: தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் மதுரையில் தேசிய பசுமைப்படை மாணவர்களின் நீடித்த உணவு, வாழ்வியல் முறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் துவக்கி வைத்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ண பிரசாந்த், விருதுநகர் சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, நிர்வாகி தருண்குமார், ரயில்வே தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், தினகரன் கலந்து கொண்டனர். கிரீன் டிரஸ்ட் ஏற்பாடுகளை செய்தது.காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், பாலிதீன் பைகளுக்கு மாற்றுப் பொருள் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். சின்னப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளிக்கு 2 ம் பரிசாக ரூ.8000, நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளிக்கு 3ம் பரிசாக ரூ.7000 வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அரசுப்பள்ளி, வாடிப்பட்டி அரசுப்பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.5000, சான்றிதழ்களை சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் சிவராமன் நன்றி கூறினார். சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி