மேலும் செய்திகள்
'கிக் பாக்சிங்' சாம்பியன் போட்டி
15-Apr-2025
மதுரை; தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து 11 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநில அளவிலான போட்டி சென்னையில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பாயின்ட் பைட்டிங் பிரிவில் சாரா, மோசிகா நாச்சியார், ஹர்ஷினி ஸ்ரீ, அகில் குமார், யுவனேஸ்வரன் ஆகியோர் தங்கம், தஸ்வின், சாய் தக் ஷின், தேவதர்ஷன் ஆகியோர் வெண்கலம், லைட் கான்டாக்ட் பிரிவில் தவராம் தங்கம், முத்து விக்னேஷ் வெண்கலம், கிக் லைட் பிரிவில் சிவதர்ஷினி தங்கம், ஜெய சிம்ம விருமன் வெள்ளி, கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் நிகில் வெள்ளி பதக்கம், புல் கான்டாக்ட் பிரிவில் பாலமுருகன் தங்கம், விஷ்ணு பிரசாந்த் வெள்ளி பதக்கமும் வென்றனர்.இவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக், பயிற்சியாளர் ரகுராமன் பாராட்டினர்.
15-Apr-2025