உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய சித்த மருத்துவ தினம்

தேசிய சித்த மருத்துவ தினம்

திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது.சித்தர் அகத்தியர் பிறந்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருமங்கலம் சித்த மருத்துவமனை பிரிவில் நேற்று விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை டாக்டர் ராம்குமார் சித்தர்கள் அகத்தியர், சுந்தரானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சித்தா டாக்டர் முத்து, டாக்டர்கள் மாரியம்மாள், பானுமதி, கீர்த்தனா பிரியதர்ஷினி, ராஜேஷ் கண்ணா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் ரேவதி வெயிலா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி