தேசிய ஸ்கேட்டிங் கூடைப்பந்து பாலமேடு மாணவர்கள் அசத்தல்
பாலமேடு : நாக்பூரில் 7வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்து போட்டிகள் நடந்தன. தமிழக அணியில் பாலமேடு ஜெராஜ் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாலமேடு பத்ரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி, அரசு மாதிரி பள்ளி அவனியாபுரம் சங்கர நாராயண நாடார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 11 வயது பிரிவில் தமிழரசன், ஸ்ரீசுதன், சிவசித்தார்த், 14 வயதில் சர்வேஷ்,17 வயதில் மோகனரூபன், ஆனந்த பிரவீன், தியாஷ், அரவிந்தன் ஆகியோர் வெள்ளி பதக்கம், 19 வயதில் யோகேஷ், ஆல்வின்பால், நிர்மல் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.தமிழக அணியில் தேனி, மதுரை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி என 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 32 புள்ளி வித்தியாசத்தில் 4வது முறையாக ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.தேசியளவில் சாதித்த மாணவர்கள், பயிற்சியாளர் பிரபாகரனை மதுரை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.