உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள்

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் 'மண்ணுக்கும் மக்களுக்கும்' சமூக அறக்கட்டளை சார்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா நடந்தது. நிறுவனர் நடிகர் சவுந்திரராஜா, உசிலம்பட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பிரேம்குமார், பேராவூரணி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க செயலாளர் பிரபாகரன்கோவிந்தன், பொருளாளர் தங்கக்கண்ணன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்புச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், அறக்கட்டளை பொதுச்செயலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி பகுதி பாரம்பரிய இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு விருதும், பணப்பரிசும் வழங்கினர். கூட்டத்தில் அரசு நம்மாழ்வாருக்கு மணிமண்டபம், நம்மாழ்வார், நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடநுாலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உசிலம்பட்டி கண்மாய் கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை சார்பில் விதைத்த பனைவிதைகளில் இருந்து மரங்கள் வளர்ந்து வருவதை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ