உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவராத்திரி நிறைவு

நவராத்திரி நிறைவு

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அக். 3ல் தொடங்கிய நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவுற்றது. விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடந்தது. மலைமேல் உள்ள ராக்காயி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 3:30 முதல் இரவு 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (அக். 13) சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோட்டைவாசல் முன்பு மாலை 4.15 மணியளவில் சுவாமி அம்பு போடும் உற்ஸவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை