வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2026 ல் திமுகவின் வெற்றி உறுதி, எடப்பாடி, நைனாரு அண்ணாமல ஓபிஎஸ் ன்னு எல்லாரும் ஸ்டாலினுக்கு உதவி செய்வாங்க
மதுரை: மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நகேந்திரன் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷா யாரை தமிழக முதல்வராக அறிவிக்கிறாரோ அவருக்காக வேலை செய்யத் தயார் என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் ஒரு காலத்தில் பேசினார். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அவரது மற்றும் எங்கள் நோக்கமாகும். ஒரு மித்த கருத்து உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தால் லட்சியம் நிறைவேறும். இதை தவிர்த்து சூழ்நிலை காரணமாக வெளியேறினால் நான் பொறுப்பாக மாட்டேன். தினகரன் எங்கள் கூட்டணியில் இருப்பார் என கூறிக் கொண்டிருக்கிறேன். அவர் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கத் தயார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஒன்றுபட்ட அ.தி.மு.க., எனக்கூறிய செங்கோட்டையன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க.,தொடர்ந்து ஆட்சியில் இருந்தது கிடையாது. அது சென்டிமென்ட். ஆட்சி மாற்றம் உறுதி. யாருடைய பின்னாலும் பா.ஜ.,இல்லை என்றார்.
2026 ல் திமுகவின் வெற்றி உறுதி, எடப்பாடி, நைனாரு அண்ணாமல ஓபிஎஸ் ன்னு எல்லாரும் ஸ்டாலினுக்கு உதவி செய்வாங்க