பத்திரப்பதிவு புறக்கணிப்பு
பேரையூர்:பத்திரப்பதிவு துறையை இ டெண்டர் மூலம் தனியார் மயமாக்குதலை கண்டித்து பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் இன்று (நவ.,4) சார் பதிவாளர் அலுவலக பத்திரப்பதிவை புறக்கணித்தனர். அவர்கள் கூறியதாவது: தனியார்மயமானால் அது எங்கள் வாழ்வாதாரங்களை இது பாதிக்கும். எனவே இதை அரசு கைவிட வேண்டும். ஒரு வாரத்திற்கு பத்திரம் தயார் செய்வதை கைவிடுவது என முடிவெடுத்துள்ளோம் என்றனர்.