உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய சேமிப்புக் கிடங்கு பணி தீவிரம்

புதிய சேமிப்புக் கிடங்கு பணி தீவிரம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்புக்கிடங்கு தற்போது பேரையூர் ரோட்டில் உள்ள போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ளது. இங்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், குறுகிய தெருவழியாக சென்று திரும்பும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க சீமானுாத்து, கல்லுாத்து கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.5.50 கோடி மதிப்பில் 3 ஆயிரம் டன் கொள்ளளவுள்ள சேமிப்புக் கிடங்கு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவு பெறும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதற்காக வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து கல்லுாத்து வரை ரோடு விரிவாக்கப்பணிகளும் விரைவில் துவங்க உள்ளது. சேமிப்பு கிடங்கு திறந்த பின், பேரையூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ