உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆங்கில புத்தாண்டு பிறப்பு மதுரை சர்ச்களில் இரவு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பு மதுரை சர்ச்களில் இரவு வழிபாடு

மதுரை : ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி மதுரை சர்ச்களில் நேற்று இரவு நடந்த பிரார்த்தனை கூட்டங்களில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பைகோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மதுரையில் அனைத்து சர்ச்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று வழிபாடு செய்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி சர்ச்களில் சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடந்தன.மதுரை கோ.புதுார் லுார்தன்னை சர்ச்சில் மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் பாதிரியார் பால்பிரிட்டோ உட்பட பாதிரியார்கள் பங்கேற்றனர். அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச்சில் பங்கு பாதிரியார் எட்வின்சகாயராஜா தலைமையிலும், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை சர்ச்சில் பங்கு பாதிரியார் அமல்ராஜ், ஞானஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில் பாதிரியார் ஜோசப், உதவி பாதிரியார் மதியழகன், பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி தாளாளர் லுாயிஸ், உதவி தலைமை ஆசிரியர் மரியஅருள்செல்வம் பங்கேற்பிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.அஞ்சல்நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் பாதிரியார் அருள்சேகர், பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் துாய பவுல் சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் சர்ச்சில் பாதிரியார் அருளானந்தம் தலைமையிலும் வழிபாடுகள் நடந்தன.அனைத்து சர்ச்களிலும் இரவு 11:00 மணி முதல் 11:45 மணி வரை 2024 ல் நன்றி வழிபாடும், இரவு 11:45 மணி முதல் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். எச்.எம்.எஸ்.,காலனி புதிய ஜீவிய சபையின் சார்பில் பைபாஸ் ரோட்டில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்தில் புதுஆண்டு வாக்குதத்த ஆராதனை நடந்தது. போதகர் டில்லி தங்கையா தலைமையில் போதகர் டென்சிங் டேனியல் ஆராதனை நடத்தினார். சி.எஸ்.ஐ., சர்ச்களில் அதிகாலை 4:30 மணிக்கு ஆராதனை நடந்தது. நரிமேடு சி.எஸ்.ஐ., சர்ச்சில் பேராயர் பிரின்ஸ் பிரபாகர் தலைமையில் ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை