உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பராமரிப்பில்லா மயானம்

பராமரிப்பில்லா மயானம்

அலங்காநல்லூர்: ‘‘கல்லணை ஊராட்சி புதுப்பட்டி மயானத்தை பராமரிக்க வேண்டும்’’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இங்கு அலங்காநல்லுார், தனிச்சியம் மெயின் ரோடு அருகே மயானம் அமைந்துள்ளது. பாதையே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறியுள்ளது. பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் அருகில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இறுதிச் சடங்குகள் செய்வதற்காக பயன்படும் குளியல்தொட்டி பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kchandra Sekaran
நவ 05, 2026 19:28

தினசரி இல்லை என்றாலும் வாரம் ஒருமுறையோ - 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ மாதம் ஒருமுறையாவது பயன்பாட்டில் இருந்தால் தொடர் பராமரிப்பும் இருக்கும்!!!