என்.எஸ்.எஸ்., முகாம்
மதுரை : மதுரை இரணியத்தில் டி.வி.எஸ்., பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. மரக்கன்றுகள் நடப்பட்டன. டி.வி.எஸ்., பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்ட அணி மற்றும் ஸ்ரீ ராம்சந்தர் மிஷன், மதுரை ரோட்டரி மிட்டவுன் கிளப், அழகர் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாடுகள் செய்தனர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நேருபாண்டியன், குடியிருப்போர் சங்கத் தலைவர் மகேஷ், பொறியாளர் உதயக்குமார், ஜெகதீஷ் பங்கேற்றனர்.