தனித்துவிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்வு
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் சிறகுகள் அமைப்பு சார்பில் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கான மாநில மாநாடு நடந்தது.சுயநிர்வாக பயிற்சி நிறுவன இயக்குனர் மனோகரி வரவேற்றார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் கோமதி பேசுகையில், '' தனித்துவிடப்பட்ட பெண்கள் எண்ணிக்கை இந்தியாவில் 39 சதவீதம் உயர்ந்துள்ளது. தனித்து வாழ்வது போராட்டமானது. குடும்ப வன்முறை சட்டம், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பிரச்னை குறித்த சட்ட ஆலோசனை பெறஇலவச சட்ட சேவை உள்ளன. பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு அவசியம்'' என்றார். தனித்து வாழும் பெண்கள் தனியாக அங்கீகரிப்பது உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் துணை இயக்குனர் தமிழரசி, துணை ஒருங்கிணைப்பாளர் மோனிஷா, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.