உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொகுப்பூதிய பணி நியமன ஆணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒன்றிய தலைவர் அன்னக்கிளி, ஜாக்டோ ஜியோ மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பெரியகருப்பன், அனைத்து சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அய்யங்காளை, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சத்துணவு திட்டத்தில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். நீண்ட காலமாக காலியாக உள்ள இடங்களில் ஒரு ஆண்டு வரை ரூ.3,000 ஊதியம் என்பது திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இல்லாதது இந்த அரசாணையை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருமங்கலம்

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சந்திரபாண்டி தலைமையில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி