மேலும் செய்திகள்
ஆபத்தான நிலையில் மேல்நிலைத் தொட்டி
18-Sep-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் நிலையூர் கால்வாய் பாலத்தை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி ராமு கூறியதாவது: வைகை நதிக்கரைக்கும் ஊருக்கும் இடையே நிலையூர் கால்வாய் செல்கிறது. வைகைக் கரையில் ஏராளமான ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. ஊரில் இருந்து விவசாய நிலங் களுக்குச் செல்ல கால்வாய் மீது பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் கட்டி பல ஆண்டுகளாகிவிட்டதால்வலுவிழந்து சேதமடைந்து வருகிறது. பல இடங்களில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கின்றன. பக்கச்சுவர்கள் பலமிழந்து உதிர்ந்து வரு கின்றன. இப்பாலம் வழியே விவசாய பயன்பாட்டுக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. விபரீதம் விளையும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துபுதிதாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
18-Sep-2025