அம்மச்சியாபுரத்தில் அதிகாரிகள் முகாம்
சோழவந்தான்: கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் நேற்று முன்தினம் (அக்.8) மலம் கிடந்த தகவல் பரவியதையடுத்து ஊராட்சி அதிகாரிகள், போலீசார் விசாரித்தனர். இதைதொடர்ந்து தொட்டி சுத்தம் செய்யப்பட்டு 'குளோரின் பவுடர்' தெளிக்கப்பட்டது. லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் தொட்டியின் 'பைப்லைன்'கள் மாற்றப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் தலைமையில் கிராமம் முழுவதும் 'ப்ளீச்சிங் பவுடர்' தெளிக்கப்பட்டது. டாக்டர் முத்தமிழ்குமரன் தலைமையில் மக்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிந்தது. மறுஉத்தரவு வரும் வரை குழாய் நீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.