மறுகால் பாயும் குன்றத்து கண்மாய்கள்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால், நிலையூர் என பெரிய கண்மாய்களும், பாணாங்குளம், சேமட்டான்குளம், ஆரியங்குளம், குறுக்கட்டான் ஆகிய சிறிய கண்மாய்களும் உள்ளன.மழைநீர், வைகை அணை தண்ணீர் மூலம் இக்கண்மாய்கள் நிரம்பும். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் இக்கண்மாய்களுக்கு 60 சதவிகிதம் மழை நீர் வந்தது. நேற்று முன்தினம்முதல் இரண்டாவது முறையாக மழைநீர் வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது.பாணாங்குளம், ஆரியங்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. பெரிய கண்மாய்கள் 40 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன. கண்மாய்கள் மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல் நடுவதற்கான ஆயத்த பணிகளை துவக்கினர்.